ஈராக் கார் குண்டு தாக்குதல்களில் 34 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று இடம்பெற்ற ஐந்து கார் குண்டு தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.  இன்று அதிகாலை பஸ்ரா நகரில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு தாக்கதலில் 24 பேர் பலியாகினர். 85 பேர் படுகாயமடைந்தனர்.  அத்துடன் பாக்தாத் நகர பஸ் நிலையம் மற்றும் சந்தைகளில் நிகழ்ந்த மூன்று கார் குண்டு வெடிப்பில் மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களில் 110க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply