அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்குமாறு அரசிடம் கோரிக்கை
நாட்டில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக பொதுமக்களும், தொழிற்சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளன. போராட்டத்தில் ஈடுபடுவோர் நீதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அத்துடன் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு எதிராக நாளை பாரியளவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது அது மின்சாரக் கட்டண உயர்வானது மக்கள் பிரச்சினை, எனவே மக்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதியளிக்கப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்த இடமளிக்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply