ஒற்றுமையாக வாழ நினைக்கும் எம்மை அரசு பயங்கரவாதி என்று கைது செய்கிறது

நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க முயற்சி செய்யும் எங்களை பயங்கரவாதிகள் என்று கூறி அரசாங்கம் கைது செய்கின்றது. உண்மையில் அரசாங்கம் பயங்கரவாதிகளை நண்பராகவும் நண்பர்களை பயங்கவாதிகளாவும் கருதுகின்றது என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார். அக்குறணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் தற்போது பத்து பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவனெல்ல பகுதியல் உள்ள பள்ளிவாயலை உடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை அநுராதபுரத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றை எதிர்வரும் இரண்டாம் திகதிக்கு முன்னர் உடைக்காவிட்டால் அதனை தான் உடைக்கப்போவதாக அநுராதபுரம் மேயர் உத்தரவிட்டுள்ளார். இச்செயலுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்ல உள்ளோம்.

நாட்டுக்குள் பயங்கரவாதிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசின் ஆதரவுடன் போலியான முறையில் புனருத்தாபனம் செய்யப்பட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் சார்பில் போட்டியிட உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு சதித் திட்டமே இதுவாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply