ஊட்டச்சத்து குறைபாட்டால் நான்கு நாட்களில் 16 குழந்தைகள் பலி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் குறை பிரசவம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியாகும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 22-ம் திகதியன்று ஊட்டச்சத்து குறைபாட்டு நோயால் மால்டா அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக பலியாகின.
நேற்றிரவு மட்டும் நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளன. இதனால் கடந்த நான்கு நாட்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இந்த குழந்தைகளின் மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக 7 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை மால்டா மாஜிஸ்திரேட் நியமித்திருந்தார்.
அவர்கள் நடத்திய ஆய்வில் 16 குழந்தைகளின் இறப்புக்கும் ஊட்டச்சத்து குறைவு மற்றும் எடை குறைவான பிரசவம் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அங்கு மேலும் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கும்படி, சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply