ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் பாதுகாப்பு பொலிஸ் மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் பாதுகாப்பு பொலிஸார் இருவரும் வாகன சாரதியும் தாக்கப்பட்டுள்ளனர்.  இத்தாக்குதலில் காயமடைந்த தனது பாதுகாப்பு பொலிஸார் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.  மட்டக்களப்பில் இடம்பெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று (26) இரவு 10 மணியளவில் வவுனியாவிலுள்ள வீட்டிற்கு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

தன்னை வீட்டில் இறக்கி விட்டதன் பின்னர், வாகன சாரதி மற்றும் பொலிஸார் வவுனியா பிரதேசத்தில் இரவு உணவை பெறுவதற்கு தயாரானபோது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சிறு காயமடைந்த வாகன சாரதி அங்கிருந்து தப்பிவந்து தன்னிடம் தாக்குதல் குறித்த விபரத்தை தெரிவித்ததாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் குறிப்பிட்டார்.

15 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply