“மட்டில். புத்தர் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு மாநகரசபை நுழைவாயிலின் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கையொப்பம் இட்டு இந்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் நுழைவாயில் புத்தர் சிலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவது தொடர்பில் எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரரின் வேண்டுகோளுக்கிணங்க நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கென ஒதுக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியை ஒதுக்குமாறும் சிலை நிறுவ உதவுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு நுழைவாயிலில் இவ்வாறு நிலை நிறுவ எடுக்கும் முயற்சியானது மட்டக்களப்பில் சமாதானத்தை குழப்பி, இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த நுழைவாயிலுக்கு வடக்காக 200 மீற்றர் தொலைவில் பிள்ளையார் ஆலயமும் மேற்கெ 500மீற்றர் தொலைவில் கத்தோலிக்க ஆலயமும் உள்ள போதிலும் அவர்கள் துணிந்து அங்கு தமது மத சிலைகளை நிறுவாமல் இருக்கும் நிலையில் புத்தர் சிலையை அங்கு நிறுவும் செயலானது சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் அது பாதிப்படைய செய்யும்.

எனவே இந்த புத்தர் சிலை அமைப்பதற்காக நெஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவை வாபஸ்பெற்று சிலை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உதவுமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply