கினியா துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான கினியாவில், எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணி ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கினியாவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தும்படி எதிர்கட்சி வலியுறுத்தி வருவதோடு, ஆளும் கட்சி காலம் கடத்தி வருகிறது. இது எதிர்கட்சியினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது, அவர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை கைகளில் ஏந்தி சென்றனர். அதை தடுத்த பொலிசார் மீது தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு பொலிசாரும் தாக்கினர். இதனால் கலவரம் மூண்டது. இதை தொடர்ந்து இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
அதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கலவரத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply