வடக்கு மக்களுக்கும் அரசியல் சுதந்திரம், அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழி வகுக்க வேண்டும்!
வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் இலங்கையர்களே எனவே வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோன்காகே தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வடக்குத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் உள்ள சிலர் அதனை தடுத்து நிறுத்த பல்வேறு காரணங்களைக் கூறி சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் வடக்கில் உள்ள மக்கள் சுதந்திரமான தேர்தல் இடம்பெற்று தமக்கு ஜனநாயக உரிமை கிடைக்காதா என ஆவலாய் உள்ளனர்.
பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் நாட்டில் சுதந்திரமாக உரிமைகளை அனுபவித்து வாழ முடியும் என்றால் ஏன் வடக்கில் வாழும் சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாக வாழக் கூடாது.
வடக்கில் வாழ்கின்றவர்களும் இலங்கையர்களே. ஏனைய மாகாண மக்கள் அனுபவிக்கும் சுததந்திரமும் உரிமைகளும் வடக்கில் வாழும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே, அரசாங்கம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply