சீனாவின் வளர்ச்சியைக் கண்டு இலங்கை அச்சமடையவில்லை!
இலங்கை சீனாவுடன் பேணி வரும் உறவுகளினால் ஏனைய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடன் மிகவும் வலுவான தொடர்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் முனைப்புக்குள் சீனா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பிற்கு மட்டுமன்றி பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வளர்ச்சியைக் கண்டு இலங்கை அச்சமடையவில்லை எனவும், அதன் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கேள்வி எழுப்பிய போதிலும், இந்த உறவானது தனிப்பட்ட ரீதியானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply