லிபியா: சிறப்பு காவல்படை முகாம் மீது போராளிகள் தாக்குதல் 6 வீரர்கள் பலி
லிபியா தலைநகர் பென்காசியின் கிழக்கு பகுதியில் உள்ள சிறப்பு காவல்படை முகாம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர்.அதிகாலை 2 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த போராளிகள், சிறப்பு காவல் படை வீரர்களை நோக்கி கண்மூடித் தனமாக சுட்டனர். வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 6 வீரர்கள் பலியாகினர். 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.தாக்குதல் நடத்த வந்த போராளிகள் தப்பி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.
கடந்த வாரம் நடைபெற்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 31 சிறப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply