ஈராக்கில் நடந்த தொடர் கார் குண்டு தாக்குதலில் 30 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள குட், அசிசியா, மகுமுதியா, நசரியா, பஸ்ரா ஆகிய 5 நகரங்களில் 7 இடங்களில் தொடர்ச்சியாக இன்று கார் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. காலை போக்குவரத்து நிறைந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சன்னி ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஈராக்கிற்கு ஐ.நா. சபை தூதர் மார்டின் கோப்லர், அதிகரித்து வரும் வன்முறைகளை அரசு தடுக்காவிட்டால் மேலும் இது வெடிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply