13இல் மாற்றம் செய்வது முற்றிலும் பிழையானது: இந்தியா இலங்கைக்கு எதிர்ப்பு

13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதோ முற்றிலும் பிழையான செயற்பாடு என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் கட்சிகள் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளும் திருத்தங்களை தடுத்து நிறுத்துமாறு கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 11ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே பிரதமர் மன்மோகன் சிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது பிழையான நடவடிக்கை எனவும் இவ்விடயம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply