ஐக்கிய தேசியக் கட்சியின் 21 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் 21 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாகாணசபை உறுப்பினர்களான மைத்திரி குணரட்ன, ஸ்ரீலால் லக்திலக்க ஆகியோர் உள்ளிட்ட 21 பேர் இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகளில் பதவி விகித்தவர்களே இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 2014ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கட்சி உறுப்பினர்களை பணி நீக்கக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
குறித்த தீர்மானம் பற்றி அறிவிக்கப்பட்ட போது கட்சி செயற்குழுக் கூட்டத்தில் வாதப் பிரதிவாதகள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி;த் தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச் செயல்களின் அடிப்படையில் இவர்களது உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply