துருக்கியில் பிரதமருக்கு எதிராக வித்தியாசமான முறையில் எதிர்ப்பு
துருக்கி நாட்டில் பிரதமர் டயீப் எர்டாகன் அரசை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 3 வாரங்களாக பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மற்றும் நீரினை பாய்ச்சியும் வன்முறையாளர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்தது.இந்நிலையில், பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியபோதும், எர்டெம் கண்டஸ என்பவர் வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். டிவிட்டரில் ஸ்டாண்டிங் மேன் என வர்ணிக்கப்பட்ட அவர் கூறும்போது, நான் தேசத்தின் சாதாரண குடிமகன். எங்களது குரல் பிறருக்கு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் மாலை வேளையில் அவருக்கு பின்னால் 100க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக எர்டெம்மிற்கு ஆதரவாக அவருக்கு பின்னால் அணியாக திரண்டு நின்றனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply