பிரபாகரனுக்கும் மன்னார் ஆயருக்கும் வித்தியாசம் இல்லை : ஹெகலிய

பிரபாகரனுக்கும் மன்னார் ஆயருக்கும் இடையில்; எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய ராயப்பு யோசேப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். ஆயரின் இந்த கூற்றை வைத்துப் பார்த்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும் மன்னார் ஆயர் ராயப்பு யோசப்புவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது என்றும் இலங்கை அரசு சுட்டிடிக்காட்டியுள்ளது. வராந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்து எந்த அதிகாரமும் இல்லாத தேர்தலை அரசு நடத்தினால் அதை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மன்னார் ஆயர் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய பொழுது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டு வீட்டிற்குள் பூட்டி வைத்தார் என்று தெரிவித்த அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழித்துள்ள நிலையில் மன்னார் ஆயர் இப்படி தெரிவித்திருப்பது ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இதற்கு அரசு கடும் கண்டன் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply