13ஆவது அரசியலமைப்பை மாற்றவோ நீக்கவோ இந்திய அனுமதிக்காது : சுரேஷ்
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் ஏற்பாடான 13ஆவது அரசியலமைப்பை மாற்றவோ நீக்கவோ இந்திய அனுமதிக்காதென இந்தியா உறுதியளித்தாக தமிழ் தேசியக் கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பயணம் செய்த குழுவில் அடங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடு திரும்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பாரக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் ஏற்பாடான 13ஆவது அரசியலமைப்பை மாற்றவோ நீக்கவோ இந்திய அனுமதிக்காதென இந்தியா உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிராந்தியம் என்ற சரத்து அடங்கிய இலங்கை இந்திய ஒப்பந்த்தில் எந்தவாரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமெல்லை என்றும் இந்திய தலைவர்கள் தெரிவித்தாக அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிந்த பின்னர் இரண்டு மூன்று சந்திப்புக்கள் டெல்லியுடன் இடம்பெற்றன என்றும் அவைகளைவிட இது முக்கியமான சந்திப்பாக அமைந்தது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply