ஊடக அதிகாரம் இருக்க வேண்டும் என்போர் அதனை பறித்தவர்களாவர் : ரணில்

ஊடகங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என யாரும் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஊடகங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என சொல்பவர்கள் ஊடகங்களின் அதிகாரங்களைப் பறித்தவர்களே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐதேகவின் புதிய யாப்பு வரைபு இன்று  தேரர்களிடம் கையளிக்கப்படுகிறது.

கோட்டே ஸ்ரீ கல்யானி ஸ்ரீதர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க அங்கமகா பண்டித்த பெல்லன ஸ்ரீ தோனவிமல தேரரிடம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொள்ளுபிட்டி வாலுக்காராமயில் வைத்து இன்று (22) காலை புதிய யாப்பு வரைபை கையளித்தார்.

நாட்டின் அரசியல் யாப்பு திருத்தப்பட வேண்டும் எனவும் அதில் குறைகள் பல காணப்படுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் இதன்போது தேரரிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் புதிய யாப்பு வரைபு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் எனவும் அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இன்று  நீர்கொழும்பு மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply