அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்துகின்றது : ஐ.தே.க
அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சட்டவிரோத கசினொ சூதாட்டத்திற்கு அரசாங்கம் பாரியளவில் வரிச் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.கசினோ சூதாட்டத்தை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக மக்களை பிழையாக வழிநடத்தும் அரசாங்கம், உண்மையில் கசினோ சூதாட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பார்க்கருக்கு பத்தாண்டு வரி விலக்கு அளிப்பதே அரசாங்கத்தின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்ட மூலத்திலும் ஜேம்ஸ் பார்க்கருக்கு சாதகமான காரணிகளே உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் ஜேம்ஸ் பார்க்கர் உரையாற்றவுள்ளதாகவும், பொதுநலவய நாடுகள் அமர்வுகளின் மூலம் பார்க்கரை பிரபல்யப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் பார்க்கரை சட்ட ரீதியான நபராக அறிமுகம் செய்ய முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கான உத்தியோகபூர்வ இணைய தளத்திற்காக 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், உண்மையில் கடந்த தடவை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அமர்வுகளின் போது பயன்படுத்தப்பட்ட இணைய தளத்தின் வடிவமைப்பில் சில திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply