உண்மையை கண்டறியும் நோக்கில் ஆஸி, நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை விஜயம்
உண்மையைக் கண்டறியும் நோக்கில் அவுஸ்திரேலியா மற்றம் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நியூசிலாந்தின் கிறீன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லோகி மற்றும் அவுஸ்திரேலிய கிறீன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்கு முன்னதாக இந்த உண்மையைக் கண்டறியும் விஜயம் அமையவுள்ளது.நிலைமைகளை நேரில் பார்வையிட்டு அறிவிக்க முடியும் என நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமைப்பின் தலைமைப் பதவியை வழங்கக்க் கூடாது என மாலதி என்ற இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் கோரியுள்ளார். மாலதி தற்போது நியூசிலாந்தில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இலங்கை மனித உரிமை நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply