விசாரணை நடாத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் : பிரித்தானியா

விசாரணை நடாத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய முறையில் விரிவான விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்தை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.ஈராக்கைத் தவிர இலங்கையில் அதிகளவில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 5676 முறைப்பாடுகள் விசாரணை செய்யாமல் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கையை வலியுறுத்தப் போவதாக வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு தொழிற் கட்சி கோரி வருகின்றது. எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதனை விடவும் அமர்வுகளில் பங்கேற்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேள்வி எழுப்பி நியாயம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply