பொதுநலவாய மாநாட்டை மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிராகவே பயன்படுத்தும் : ஜே.வி.பி.
பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்தைய நாடுகள் அம் மாநாட்டை இலங்கைக்கு எதிராக பயன்படுத்துவதோடு மார்ச் மாதம் இடம் பெறும் ஐ.நா. மனித உரிமை மாநாட்டிலும் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணையை மீண்டும் முன் வைக்கவுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.பொது நலவாய அமைப்பின் தலைமைத்துவத்தினுௗடாக பலத்தை பெற்றுக் கொண்டு அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில், பல கோடி ரூபாய்களை செலவழித்து பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மூடிவிட்டு இம்மாநாடு நடத்தப்படுகின்றது. இதன் மூலம் நாட்டுக்கு அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ எதுவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.
மாறாக இம் மாநாட்டில் கலந்துகொள்ளும் மேற்குலக நாடுகள் இம் மாநாட்டு மேடையை இலங்கைக்கு எதிராகவே பயன்படுத்தும் இந்தியாவும் இதனையே பின்பற்றும். இது மட்டுமல்லாது இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை முன் வைத்து எமது நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கிய செய்திகளை ஒளிபரப்பு செய்த சனல் 4 தொலைக்காட்சியை சேர்ந்த கெலும் மக்ரேவுக்கு விசா கொடுத்துள்ளது அரசாங்கம்.
சனல் 4 கெலும் மக்ரே இங்கு வந்து மேலும் பல இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிகளை தயாரிக்க வாய்ப்பு கிடைக்கும். இதுவொரு பயங்கரமான சூழல் ஆகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது நலவாய நாடுகளின் அமைப்பின் தலைமை பதவியை ஏற்பதற்கும் அதன் மூலம் பலத்தை பெற்றுக்கொண்டு அவசர அவசரமாக அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்தி மீண்டும் அதிகாரத்தை பெறும் நோக்கில் தேசப்பற்றும் ஏகாதிபத்தியவாத எதிர்ப்பு அனைத்தையும் கைவிட்டு மாநாட்டை நடத்துகின்றார். இறுதியாக இதனால் மிஞ்சுவது மக்கள் மீது அதிகரிக்கப்பட்ட வரிச் சுமையே ஆகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply