பொதுநலவாய வர்த்தக மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம் 67 நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள வர்த்தக பேரவை இன்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இப்பேரவை நடாத்தப்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் இன்றைய நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பர்.வர்த்தகப் பேரவையை முன்னிட்டு கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் அனைத்து ஏற்பாடுகளும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் நேற்றைய தினம் ஹோட்டலுக்கு விஜயம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் கண்டு திருப்தி அடைந்தனர்.

வர்த்தகப் பேரவைக்கு பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைத் தவிர்ந்த ஏனைய உலக நாடுகளும் வருகை தரவுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே பதிவு செய்து கொண்டதன்படி சுமார் 67 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் இப்பேரவையில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

முக்கிய பேச்சு வார்த்தைகள், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இலங்கை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் இதன்போது பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply