தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு
இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அதற்கு முன்பே 6 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.
ஆனாலும் திட்டமிட்டபடி திறப்பு விழா நிகழ்ச்சி 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படைத்துறையினர், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply