போர் குற்றவாளி என் மீதான புகார் குறித்து கவலைப் படவில்லை: ராஜபக்சே
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தன் மீது கூறப்படும் போர் குற்றவாளி குற்றச்சாட்டு குறித்து கவலைப் படவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.இங்கிலாந்தை மையமாக கொண்ட சேனல் 4 டெலிவிசனுக்கு அளித்த பதிலில் அவர் இதை தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாடு குறித்த செய்தி சேகரிப்பதற்காக மக்ரே தலைமையிலான சேனல் 4 டெலிவிசன் குழு கொழுப்பு சென்றுள்ளது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது ராஜபக்சேவிடம் கேட்ட கேள்விக்கு அவர் இதை தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு ராஜபக்சே பதில் அளிக்க மறுத்து விட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply