பொதுநலவாய மாநாட்டிற்காக அரசாங்கம் எல்லைமீறி பணத்தை வீண்விரயம் செய்கிறது :ஐ.தே.க.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக சர்­வ­தேச அளவில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இத்­த­று­வாயில் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்­காக அரசு தனது எல்லை மீறி பணத்தை வீண் விரயம் செய்­கி­றது. இருப்­பினும் எதிர்­வரும் 15ஆம் திகதி இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்­வுக்கு எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்வார் என ஐக்­கிய தேசிய கட்சி தெரி­விக்­கி­றது.அத்­துடன் பொது­ந­ல­வாய அமைப்பின் தலைமை பத­வியை ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ ஏற்ற பின்னர் பொது­ந­ல­வாய அமைப்பின் கோட்­பா­டு­களை பாது­காக்­கு­மாறு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய அர­சியல் கட்சிகளுக்கு அத­னூ­டாக இலங்கை வாழ் மக்கள் உரி­மை­க­ளுக்­காக பய­மின்றி போராட முடியும் என அக்­கட்­சியின் பொது செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக சர்­வ­தேச அளவில் பல குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக பொது­ந­ல­வாய அமைப்பின் கோட்­பா­டு­க­ளாக கரு­தப்­படும் ஜன­நா­யகம், மனித உரி­மைகள், ஊடக சுதந்­திரம் ஆகி­யவை மீறப்­ப­டு­வ­தாக பல்­வேறு நாடுகள் இலங்­கையின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளன. எவ்­வா­றா­யினும் இம்­முறை பொது­ந­ல­வாய அரச மாநாடு இலங்­கையில் நடை­பெ­ற­வுள்­ளது. 1983 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அப்­போ­தைய பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் சிறிதன் ரம்பால் முடி­வெ­டுத்த போதும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெய­வர்­தனா அதனை முற்­றாக நிரா­க­ரித்தார். அதற்கு மூல­கா­ரணம் பொது­ந­ல­வாய மாநாட்டை நடத்­து­வ­தற்கு போதி­ய­ள­வி­லான நிதிக் கொள்கை காணப்­ப­டா­மை­யாகும்.

இருப்­பினும் ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவால் நிரா­க­ரிக்­கப்­பட்ட பொது­ந­ல­வாய மாநாட்டை தற்­போ­தைய ஜனா­தி­பதி அங்­கீ­க­ரித்­துள்ளார். இம்­மா­நாட்­டுக்­காக கொழும்பு நகரை அலங்­கா­ர­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு அரசு தனது எல்­லையை மீறி வீண் விரயம் செய்­கி­றது. இவ்­வ­லங்­கார செயற்­றிட்­டங்­க­ளுக்கு பெரு­ம­ள­வி­லான தொகை செல­வி­டப்­பட்ட போதும் அதனை அர­சாங்கம் மறைத்­துள்­ளது. எனவே இம்­மா­நாட்­டுக்­காக அர­சினால் செல­வி­டப்­படும் செல­வீ­னங்கள் தொடர்­பாக பொறுப்பு வாய்ந்த எதிர்க்­கட்சி என்ற வகையில் எமது எதிர்ப்பைத் தெரி­விக்­கின்றோம். அத்­துடன் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான தேர்தல் நடை­பெ­றாமை, பாரா­ளு­மன்­றத்தை அவ­ம­தித்தல் பேச்­சு­ரிமை சுதந்திரம் மீதான அச்­சு­றுத்தல், ஊட­க­வி­ய­லாளர் கடத்தல் மற்றும் படுகொலை செய்தல், நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை சட்­டத்­துக்கு முர­ணான வகையில் நீக்­கி­யமை மற்றும் நீதி­மன்ற, தேர்தல் மற்றும் பொலிஸ் சுயா­தீன ஆணைக்­குழு நிய­மிக்­காமை தொடர்­பாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை பொது நல­வாய அமைப்­பி­லுள்ள நாடுகள் முன்­வைக்­கின்­றன.

அது மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச சட்­டத்­த­ர­ணிகள் சங்க பிர­தி­நி­திகள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வரின் பயண அனு­ம­திப்­பத்­தி­ரத்தை நிரா­க­ரித்­தமை போன்­றவை பொது­ந­ல­வாய அமைப்பின் மனித உரிமை மீறல்­க­ளாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் எதிர்­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பொது­ந­ல­வாய அமைப்பின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ பொறுப்­பேற்­க­வுள்ள நிலையில் பொது­ந­ல­வாய அமைப்பின் கோட்­பா­டு­க­ளாக கரு­தப்­படும் ஜன­நா­ய­கத்தை ஸ்தாபித்தல், மனித உரிமை, பேச்­சு­ரிமைச் சுதந்­திரம், அதி­கா­ரப்­ப­கிர்வு, சட்­ட­வாட்சி , நல்­லாட்சி, சுகா­தார, கல்வி, உணவு மற்றும் வீட்­டு­ரிமை, ஆண் பெண்­க­ளுக்­கான சம­வு­ரிமை மற்றும் சிவில் சமூ­கத்­த­வ­ருக்கு ஆற்ற வேண்­டிய கட­மைகள் என மேற்­படி கோட்­பா­டு­களை இலங்கை ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ செயற்­ப­டுத்­து­வாரா? என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

பொது­ந­ல­வாய அமைப்பின் மேற்­படி கோட்­பா­டு­களை தமிழ், சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வெளி­யிட்­டி­ருந்தால் தமக்­குள்ள உரிமை தொடர்­பாக நமது நாட்டு மக்கள் புரிந்து கொண்­டி­ருப்பர். இருப்­பினும் அதனை நமது அர­சாங்கம் செயற்­ப­டுத்­த­வில்லை. அதே­போன்று பொது­ந­ல­வாய அமைப்பின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஏற்றவுடன் பொதுநலவாய அமைப்பின் கோட்பாட்டை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுக்கு வாய்ப்பு கிட்டும். எனவே, மக்களுக்குள்ள உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசுடன் போராட முடியும். எவ்வாறாயினும் இலங்கை மீதுள்ள மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply