ஐ.நாவின் மனித உரிமை பேரவை உறுப்பினரானது சீனா

ஐ.நா சபையின் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடாக சீனா தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் 176 வாக்குகள் பெற்று சீனா உறுப்பு நாடாகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் சீனா 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை உறுப்பினராக இருக்கும். இதுகுறித்து பேசிய ஐ.நா.விலுள்ள சீன நிரந்தரத் துணைப் பிரதிநிதி வாங் மின்சீன அரசு மனித உரிமைகளை முன்னேற்றி, பாதுகாப்பதில் வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றது. இத்துறையில் சர்வதேச சமூகத்துடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றது. என்று தெரிவித்தார்.
தவிர, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், கியூபா, தென்னாப்பிரிக்கா, சௌதி அரேபியா முதலிய 13 நாடுகள் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply