பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநா ட்டின் ஆரம்ப வைபவம் இன்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி­ய­ளவில் கொழும்பு தாமரை தடா­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில் இன்று ஆரம்­ப­மாகும் அரச தலை­வர்கள் மாநாடு நாளை மறு­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பகல் ஒரு மணி­வரை நடை­பெறும். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள அரச தலை­வர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரிட்டிஷ் இள­வரசர் சாள்ஸ் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா மற்றும் பொது­ந­ல­வாய அமைப்பின் அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்கள் மற்றும் விசேட பிர­மு­கர்கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
இந்­நி­லையில் ஆரம்ப நிகழ்வில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் சர்மா பிரிட்டிஷ் இள­வ­ரசர் சாள்ஸ் அவு­ஸ­தி­ரே­லிய பிர­தமர் டோனி அப்போர்ட் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.இதே­வேளை பொது­ந­ல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டின் ஆரம்ப வைபவம் நடை­பெறும் தாமரை தடாகம் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அரச தலை­வர்­களை வர­வேற்­ப­தற்­கான ஒத்­தி­கை­களும் கடந்த சில தினங்­க­ளாக இடம்­பெற்­றன.

மேலும் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டை முன்­னிட்டு கொழும்பில் விசேட பாது­காப்பு ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­க­ப்­பட்­டுள்­ளன. சுமார் 20 ஆயிரம் பொலிஸார் பொது­ந­ல­வாய பாது­காப்பு பணிக்­காக கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்ள நாடு­களின் தலை­வர்கள் பெரும்­பாலும் இல ங்கை வந்­த­டைந்­து­விட்­டனர். பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் மற்றும் அவ­ரது பாரியார் கமீ­லாவும் நேற்­றைய தினம் இலங்கை வந்­த­டைந்­தனர்.

இன்­றைய அரச தலை­வர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பின்னர் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்­திலும் வேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­ட­லிலும் அரச தலை­வர்கள் கலந்­து­கொள்ளும் கலந்­து­ரை­யா­டல்­கள் நாளையும் நாளை மறு­தி­னமும் இடம்­பெ­ற­வுள்­ளன.

அத்­துடன் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்ள தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு சந்­திப்­புக்­களும் அவ்­வப்­போது மூன்று தினங்­க­ளிலும் நடை­பெ­ற­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டு­களை அந்­த­தந்த நாடு­களின் தூத­ர­கங்கள் முன்­னெ­டுத்­துள்­ளன.
பொது­ந­ல­வாய அரச தலை­வர்­க­ளின் பாரி­யார்கள் கலந்­து­கொள்ளும் பல்­வேறு நிகழ்­வுகள் கொழும்­பிலும் கண்­டி­யிலும் இன்­றும நாளையும் நடை­பெ­ற­வுள்­ளன.

இது இவ்­வாறு இருக்க இந்­தியா கனடா மற்றும் மொரி­ஷியஷ் ஆகிய நாடு­களின் தலை­வர்கள் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தில்லை என்று அறி­வித்­துள்­ளனர்.
இந்­தி­யாவின் சார்பில் அந்­நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­கின்றார். இந்­தி­யாவின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்­து­கொண்­டுள்­ளமை திருப்­தி­ய­ளிக்­கின்­றது என்று நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை கடந்த சில தினங்­க­ளாக அம்­பாந்­தோட்­டையில் நடை­பெற்­று­வந்த பொது­ந­ல­வாய இளைஞர் மாநாடு மற்றும் பொது­ந­ல­வாய மக்கள் மாநாடு ஆகி­ய­னவும் கொழும்பில் நடை­பெற்­று­வந்த பொது­ந­ல­வாய வர்த்­தக மாநாடும் நிறை­வ­டைந்­து­விட்­டன. பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டின் கார­ண­மாக அவ்­வப்­போது கொழும்பு நகரின் சில வீதிகள் மூடப்­பட்­டு­வ­ரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply