ஐரோப்பாவில் குடியேற சென்றவர்களின் படகு அயானியன் கடலில் கவிழ்ந்தது : 12 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக சட்டவிரோதமாக இத்தாலி நோக்கி சென்றவர்களின் ஹீலியம் படகு மத்தியத் தரைக்கடல் பகுதியிலுள்ள அயானியன் கடலில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.இறந்தவர்கள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. வானிலை நன்றாக உள்ள நிலையில் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்று உடனடியாக தெரியவரவில்லை. போரால் சூறையாடப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்கள் கிரீஸ் மற்றும் இத்தாலி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுகுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் தீவிர சண்டை நடந்துவரும் வேளையில் கிரீஸ்- துருக்கி ஆகிய நாடுகளின் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடல் பகுதி வழியாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு இங்கு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் லாம்பெடுசா தீவு அருகே நடந்த இருவேறு படகு விபத்தில் சட்டவிரோதமாக குடிபுக சென்ற 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் கொள்கைகள் விமர்சனத்துக்குள்ளானது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply