எனக்கு இலகுவில் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் இருக்கின்றது : அமைச்சர் மேர்வின் சில்வா

தாம் பராக்கிரமபாகு மன்னனைப் போன்று செயற்பட போவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியைப் போன்றவர் எனவும் தடைகளைக் கண்டு அஞ்சுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தாம் எதிரிகளைக் கண்டு அஞ்சியதில்லை எனவும், எவரும் தம்மை அமைதியாக ஒதுங்கியிருப்பதாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். களனி மக்களுடன் மட்டுமன்றி கம்பஹா மாவட்ட மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். களனி பிரதேச சபையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வயது முதிர்ந்த மருத்துவர் அனுபவம் காரணமாக விரைவில் நோயாளிகளின் பிரச்சினைகளை அறிந்து கொள்வது போல் தமக்கும், இலகுவில் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply