அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் : தென் ஆபிரிக்கா
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது.உயர்மட்ட தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு; செல்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் குறித்த பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இந்த விஜயம் டிசம்பர் மாத ஆரம்பப் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீளத் தொடர வேண்டுமேன தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா விரும்பியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவி;த்துள்ளார். அண்மையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது தென் ஆபிரிக்க ஜனாதிபதி, அரசாங்க மற்றும் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply