மெக்சிகோ நாட்டில் 11 பேர் எரித்துக்கொலை

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டூழியத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்து வருகிறார்கள். இந்நிலையில் டாசாகா மாகாணத்திலுள்ள சான்டியாகோ ஜூஸ்காஹூவா நகருக்கு அருகே லாரியில் எரிந்த நிலையில் 10 பேர் உடல்கள் கிடந்தன. அதன் அருகே மற்றொரு நபர் தலையில் குண்டு பாய்ந்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இவர்கள் யார்? கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை.தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரிக்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply