போகம்பரை சிறைச்சாலை ஜனாதிபதியிடம் கையளிப்பு :சந்திரரட்ன பல்லேகம

கண்டி போகம்பரை சிறைச்சாலை வளாகம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரட்ன பல்லேகம தெரிவித்துள்ளார். போகம்பரை சிறைச்சாலை வளாகம் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பழைய சிறைச்சாலை வளாகம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 31ஆம் திகதி யுடன் கைதிகள் இடமாற்றம் செய்யப் பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகளும் விசேட தரத்திலுள்ள பயங்கரக் குற்றவாளிகளும் கொழும்பு வெலிக்கடைச் சிறைக்குமாற்றப் படுவதுடன் ஏனைய சாதாரண குற்றவாளிகள் பல்வேறு இடங்களுக்கும் மாற்றப்பட உள்ளனர்.

போகம்பரை சிறைச்சாலை வளாகம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு மக்கள் பார்வைக்காக விடப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply