நச்சு வாயுக்கசிவு சவுதியில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் பலி ஒருவருக்கு ஆபத்து
சவுதி அரேபியாவில் நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் இலங்கையர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக சவுதி பொலிஸார் தெரிவித்தனர்.இலங்கையைச் சேர்ந்த 34 வயதுடைய சேவகரான ஜானக்க விக்ரமாராச்சி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கிங் கால்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெயில் பொலிஸ் அதிகாரி அப்துல் அஸிஸ் அல்-சினாய்தி தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட அறையொன்றில் நித்திரையில் இருந்தவர்கள் நச்சு வாயுவை சுவாசித்ததில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply