இந்திய துணைதூதர் தேவயானி ஐ.நா., சபைக்கான இந்திய தூதகர அதிகாரியாக இடமாற்றம்

அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானி, ஐ.நா., சபைக்கான இந்திய தூதகர அதிகாரியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர், தூதரக அலுவலர்களுக்கான பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும்.இதற்கிடையே, தேவயானி கைது செய்யப்படுவதற்கு காரணமான ஊழியர் சங்கீதாவின் கணவர் மற்றும் இரு குழந்தைகள், சில நாட்களுக்கு முன், அமெரிக்காவுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அமெரிக்கா சென்று சேர்ந்த இரு நாட்களுக்கு பிறகு, தேவயானி மீதான கைது நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply