பயங்கரவாத இணைய தளங்களை கண்காணிக்க ஐ.நா. உடன்படிக்கை

பயங்கரவாத அமைப் புகளின் இணைய பயன் பாட்டை கண்காணிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஏகமனதாக புதிய உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது. இதன்படி பயங்கரவாத அமைப்புகளும் பயங்கரவாதிகளும் இணையத்தை பயன்படுத்தி, பயங்கரவாத நட வடிக்கைகளை தூண்டிவிடுவது, ஆள்சேர்ப்பது, உதவி செய்வது, சதித்திட்டம் தீட்டுவது ஆகிய நட வடிக்கைகளில் ஈடுபடுவதை ஐ.நா.பயங்கரவாத தடுப்பு நிறுவனம் பல்வேறு நாடுகளுடனும் தொடர் புடைய சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து தடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும். இவ்வுடன் படிக்கையின் படி பாதுகாப்பு அவையின் பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் பதவிக்காலம் 2017 ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply