ஜெனீவாவில் வழங்கிய உறுதிமொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை : சம்பந்தன்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையோ அன்றேல் 2013 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. அதேபோன்று வடமாகாண சபையின் சீரான இயக்கத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.மாகாண சபையை முறையாக இயங்கச் செய்ய மத்திய அரசுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக நாங்கள் அரசுக்கு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினோம்.முதலமைச்சர் ஜனாதிபதியுடன் நேரில் சென்று சந்தித்து பேச்சு நடத்தினார். ஜனாதிபதிக்கும் முதலமைச்சருக்குமிடையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால், இவை எதுவுமே நிறைவேற்றப்படவி ல்லை என்றார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் பொதுமக்களின் காணிகள் பல சுவீகரிக்கப்பட் டுள்ளன. தொடர்ந்து சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த காணிகளில் அவர்கள் தொட ர்ந்து வாழ வழியில்லாத நிலைமை காண ப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இராணுவத்தினரின் நடவடிக்கைகள் இவ ற்றுக்குப் பெரும் இடையூறாக இருந்து வருகின்றன.
கடற்றொழிலை மேற்கொள்ள முடியா தவர்களாக மீனவர்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கான அறிகுறிக ளைக் காண முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்ன த்தை குறைத்து சிவில் அதிகாரிகளின் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். வடமாகாண சபையை முறையாக கொண்டு நடத்த முடியாத சூழ்நிலையே உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து நாம் அதீத கவனம் செலுத்தி வருகிறோம். இனப்பிரச்சினைக்கான அர சியல் தீர்வு தொடர்பிலும் இழுத்தடிக் கப்பட்டு வருகின்றது. எமது இலக்குகள் குறித்து நாம் எப்போதும் கவனம் செலுத் தியே வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. உயர் ஸ்தானிகர் தனது நேரடிக் கவனத்தை செலுத்தியுள்ளார். ஜெனீவா கூட்டத் தொடர் தொடர்பில் தேவைப் படும் சந்தர்ப்பங்களில் தேவையான விளக்கங்களை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply