ஜெனிவா தீர்மானத்தை வலுவாக மாற்றி மக்களை ஒன்றுதிரட்டவும் தயாராகவேண்டும் : சம்பந்தன்

ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக கடு­மை­யான சவால்­களும் அழுத்­தங்­களும் ஏற்­படும் என்­ப­த­னா­லேயே ஜனா­தி­ப­தியும் அமைச்­சர்­களும் வெளி­நா­டு­க­ளுக்கு சென்று தமக்கு ஆத­ர­வாக பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். எனவே, ஜெனிவா மாநாடு நடை­பெ­று­வ­தற்கு முன் நாமும் வெளி­நா­டு­க­ளுக்கு விஜயம் செய்து எமது பிரச்­சி­னை­களை விளங்­கப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியத் தேவை இப்­போது உரு­வா­கி­யுள்­ளது. இதன் மூலமே ஜெனிவா மாநாட்டில் இலங்­கைக்கு தீர்க்­க­மான அழுத்­தத்­தினை ஏற்­ப­டுத்த முடி­யு­மென தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.திரு­கோ­ண­ம­லையில் நேற்று நடை­பெற்ற தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச்­சபை கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

எதிர்­வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி தொட்டு 28 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் இறுதி வாரத்தில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் கொண்டு வரப்­ப­டு­மெ­னவும் அத்­தீர்­மானம் இலங்­கைக்கு கடு­மை­யான சவா­லையும் அழுத்­தத்­தி­னையும் ஏற்­ப­டுத்தும் என்றும் நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

இவ் தீர்­மா­னத்­தினை முறி­ய­டிக்கும் நோக்­கி­லேயே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்­களும் பல­நா­டு­க­ளுக்கு விஜயம் செய்து தீவிர பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக முஸ்லிம் நாடு­களை தேடித்­தேடி அவர்கள் செல்­வது இதுவே கார­ண­மாகும்.

ஆயினும் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை அழுத்­த­மான தீர்­மா­ன­மாக மாற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எமக்கு சாத­க­மாக இதனைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எமது தமிழ் மக்­களும் தமிழ் கட்­சி­க­ளுடன் ஒற்­று­மை­யுடன் செயற்­ப­டு­வோ­மாயின் அது பல­மான செயற்­பா­டாக அமையும். நாம் இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பட வேண்­டிய ஒரு கால­கட்­டத்தில் உள்ளோம்.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளாக இருக்­கட்டும், மாகாண சபை­க­ளாக இருக்­கட்டும் பாரா­ளு­மன்­ற­மாக இருக்­கட்டும் பொறுப்­புடன் செயற்­பட வேண்­டிய ஒரு கால கட்­டத்­தி­லேயே நாம் உள்ளோம். எனவே, முரண்­பா­டு­க­ளையும் வேற்­று­மை­க­ளையும் மறந்து ஒற்­று­மை­யுடன் தீர்க்­க­மான முறையில் செயற்­பட வேண்டும்.அண்­மையில் உள்­ளூ­ராட்சி சபைகள் சில­வற்றில் வரவு- செலவு திட்டம் நிறை­வேற்­றுதல் தொடர்பில் சில தளம்பல் நிலைகள் ஏற்­பட்­ட­மை­யா­னது அதி­ருப்தி அளிப்­ப­தா­கவே உள்­ளது.

நாம் நமது இலட்­சிய வெற்­றியை பெற்றுக் கொள்­வ­தற்கு போராட வேண்­டி­யுள்­ளது. மக்கள் பிர­தி­நி­திகள் எம் இலட்­சி­யங்களை மக்கள் மயப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது.வட­மா­காண சபைக்­கான தேர்­தலை நடாத்­து­வ­தற்கு அர­சாங்கம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் முனை­ய­வில்லை. ஆனால் இந்­தியா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், சீனா, ரஷ்யா உட்­பட பல நாடுகள் கொடுத்த அழுத்­தமே வட மாகாண தேர்தல் நடத்­தப்­பட்­ட­தற்கு காரணம். இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யதன் கார­ண­மாக வட­மா­காண சபையை இயங்­க­வி­டாது முட்­டுக்­கட்டை போடு­வ­தி­லேயே அர­சாங்கம் அக்­கறை காட்டி வரு­வதைக் காண்­கிறோம்.

வட­மா­காண சபை சரி­யாக இயங்கி அதி­காரம் கிடைக்கப் பெற்றால் ஏனைய மாகாண சபை­க­ளுக்கு அது முன்­மா­தி­ரி­யாக அமையும் என்ற கார­ணத்­தி­னா­லேயே மிக சூட்­சு­ம­மாக வட­மா­காண சபையை முடக்கும் செயற்­பாட்டை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது.

கடந்த 4 மாதங்­க­ளுக்குள் வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் ஜனா­தி­ப­தி­யு­டனும் அர­சாங்­கத்­து­டனும் பல்­வேறு பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இருந்த போதிலும் ஜனா­தி­ப­தி­யினால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்றே கூற வேண்டும்.

குறிப்­பாக வட­மா­காண பிர­தம செய­லா­ளரை இட­மாற்றம் செய்­வது தவிர்ந்த ஏனைய எல்லா விட­யங்­க­ளையும் செய்வேன் என்று கூறிய ஜனா­தி­பதி இது­வரை அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எதையும் செயற்­ப­டுத்­த­வில்லை.

பிர­தேச செய­லா­ளரை மாற்ற முடி­யா­மைக்­கான கார­ணத்தை கூறு­கின்ற போது அதற்கு பொருத்­த­மான இன்­னொ­ரு­வரை தேர்ந்­தெ­டுப்­ப­தற்கு நிலை இல்லை. எனவே மாற்ற முடி­யாது என காரணம் கூறினர்.

எவ்­வா­றா­யினும் ஜெனீவா மனித உரி­மைகள் மாநாட்­டிற்கு முன்­பாக நாங்கள் பல்வேறு முன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு அமைய மாநாட்டிற்கு முன்னர் நாங்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

ஜெனீவாவிற்கு முன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஜனநாயக நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படின் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு தயாராக இருக்கின்ற போது தான் எங்களது இலக்கை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply