அரசசார்­பற்­ற நிறு­வ­ன­ங்கள் அர­சை கவிழ்ப்­ப­தற்கு சதி செய்­வ­தாக கூறும் அரசு ஏன் அவர்களை கைதுசெய்­யவில்­லை: அசாத்­சா­லி

அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் (என். ஜீ.ஓ) சதி செய்­வ­தாக அர­சாங்கம் குற்­றம்­சாட்­டு­கி­றது. அப்­ப­டி­யானால் அவ்­வா­றா­ன­வர்­களை அர­சாங்கம் கைது செய்­ய­வில்லை என கேள்­வி­யெ­ழுப்பும் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அசாத் சாலி, ஹுலு­கல்­லவின் இன்­றைய நிலை­மையை அமைச்­சர்கள் பாட­மாக எடுத்­துக்­கொள்ள வேண்­டு­மென்றும் தெரி­வித்தார்.அதி­கா­ரத்தைப் பர­­வ­லாக்கி நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்­ற­போதே அதன் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அசாத் சாலி இதனைத் தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­ப­தியை மின்­சா­ரக்­க­தி­ரையில் அமரச் செய்யப் போகின்­றது, சர்­வ­தே­சத்தால் நாட்டின் இறை­மைக்கு பாதிப்பு ஏற்­படப் போகின்­றது என அர­சாங்கம் மீண்டும் பழைய பல்­ல­வியை பாட ஆரம்­பித்­துள்­ளது. இவ்­வாறு கூறி மக்­களை ஏமாற்றி எதிர்­வரும் தேர்­தல்­களில் மக்­களின் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்­கவே அரசு முயற்­சிக்­கின்­றது. இந்துக் கோயில்கள், பள்­ளி­வா­சல்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை உடைப்­ப­தற்­காக பொது பல சேனாவை பயன்­ப­டுத்தும் அர­சாங்கம் மறு­புறம் பிர­த­ம­ருக்கு எதி­ராக போர்க்­கொடி உயர்த்­து­வ­தற்கு ஜாதிக ஹெல உறு­ம­யவை தூண்­டி­வி­டு­கி­றது. இன்று அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளுக்கு தமது கட­மை­களை சுதந்­தி­ர­மாக செய்ய முடி­யாது. அவர்­களை தனி­யொரு குடும்­பத்­தி­னரே ஆட்­டு­விக்­கின்­றனர்.

எனவே, அமைச்­சர்கள் பொம்­மை­க­ளா­கவே உள்­ளனர். இலங்கை- இந்­திய மீனவர் பிரச்­சினை தொடர்­பாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன டில்­லிக்குச் சென்று மத்­திய அரசின் ஆத­ரவை பெற்றுக் கொண்­டுள்­ள­தோடு இப்­பி­ரச்­சி­னையில் முரண்டு பிடித்த தமிழ் நாட்டு முதல்வர் ஜெய­ல­லி­தா­வையும் இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வந்து தமிழ் நாட்டு அதி­கா­ரி­க­ளுடன் எமது அதி­கா­ரிகள் பேச்­சுக்­களை நடத்தி ஒரு மாத காலம் இரு நாட்டு கடல் எல்­லையில் மீன்­பி­டிப்­ப­தில்­லை­யென்றும் அதற்குள் பிரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்வு காணவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

ஆனால், இதனை குழப்பி தேசப்­பற்­றா­ளர்கள் என பெயரை தேடிக்­கொள்ள ஹெல உறு­மய முயற்­சிக்­கின்­றது. அர­சாங்கம் அர­சியல் ரீதியில் வங்­கு­ரோத்து நிலைக்கு தள்­ளப்­பட்­டு­விட்­டது. இத­னால்தான் நடி­கை­களை தேர்­தலில் போட்­டி­யிடச் செய்­ய­வுள்­ளனர்.அர­சாங்­கத்தை கவிழ்க்க (என். ஜீ.ஓ) க்கள் சதி­செய்­வ­தாக அர­சாங்கம் கூறு­கி­றது.

அப்­ப­டி­யானால் ஏன் அவர்­களை கைது­செய்து சட்­டத்தின் முன் நிறுத்­த­வில்லை. ஏனென்றால் அவ்­வா­றான சதித்­திட்­டங்களே கிடை­யாது அதனை நிரூ­பிக்­கவும் முடி­யாது. மக்களை ஏமாற்றி அனுதாபத்தை பெறவே இந்த முயற்சியாகும். ஹூலுகல்ல பதவியிலிருந்தபோது என்ன ஆட்டம் போட்டார். ஆனால் இன்று ஆடி அடங்கவிட்டார். ஆட்டுவித்தவர்களே அவரை அடக்கிவிட்டனர். இதனை அமைச்சர் சிலர் பாடமாகக்கொள்ள வேண்டுமென்றும் அசாத்சாலி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply