இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவில்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது மீனவர் பிரச்சினை, இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் மாநாட்டில், போர்க் குற்றம் குறித்து இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அந்த தீர்மானம் குறித்தும், அதற்கு இந்தியா ஆதரவு அளிக்கக்கூடாது என்றும் சல்மான் குர்ஷித்தை, பீரீஸ் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply