யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் : சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்ழ சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகளை நடாத்த அனுமதிக்குமாறு இலங்கையை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் உள்ளக விசாரணைகளின் மீது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை கொண்டுள்ள நம்பிக்கை அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளை நடாத்த இந்தியா முழு அளவில் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரும் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க இந்தியா முழு அளவில் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply