சிரியாவில் தேர்தலை நடத்த முடியாது
சர்வதேசத்தின் கோரிக்கைக்கு அமைய சிரியாவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று, அந்த நாட்டின் ஜனாதிபதி பசார் அல் அசாட்டின் ஆலோசகர் போதைனா ஷபான் தெரிவித்துள்ளார். சிரியாவில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகளை நிறுத்து, அந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால், மேலும் வன்முறைகள் தீவிரமடையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அந்த நாட்டின் எதிர்கட்சி முன்வைத்திருந்தா நாடுகடந்த அரசாங்கம் என்ற திட்டத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply