சவுதியில் கொலை குற்றத்திற்காக இந்திய தொழிலாளியின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் கொலை செய்த இந்திய தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டது. முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு, கொலை, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.அந்த வகையில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட இந்திய தொழிலாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது லத்தீப்.

இவர் தன்னுடன் பணபுரிந்த டாபர் பின் முகமது அல்–துஸ்காரி என்பவரை குத்தி கொலை செய்தார். பின்னர் பிணத்தை ஒரு கிணற்றில் வீசி மறைத்தார்.

இதுகுறித்து ரியாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தலை துண்டித்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியாவில் லத்தீப்பையும் சேர்ந்து இந்த ஆண்டு இதுவரை 3 பேரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 78 பேர் தலை துண்டிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply