சிலியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

சிலி நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மிஷேல் பச்சலெட்டுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து ஜனாதிபதி செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இரண்டாவது தடவையாகவும் சிலி நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் தசாப்தத்தில் சிலி நாடு அபிவிருத்தி மற்றும் அமைதியை அனுபவிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இரு நாட்டுக்குமிடையில் காணப்படும் நட்புறவானது உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் மேலும் பலப்படும் என்று நம்புகிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply