வாக்குகளைப் பெற தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: முதல்வர் ஜெயலலிதா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர், வாக்குகளைப் பெறுவதற்காக தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். மேலும், நதிகளை இணைப்பது என்பது பாரதி கண்ட கனவு; அதை அதிமுக நிறைவேற்றும். ஆனால் 14 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக., தனது தேர்தல் அறிக்கையில், தற்போது நதிகளை இணைப்போம் என்று கூறுகிறது. இது வாக்குகளைப் பெற ஏமாற்றுவதாக உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுக இதைத்தான் கூறுகிறது. கடந்த கால காங்கிரஸ் அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. ஆனால் தமிழக நலன்கள் பெரிதும் காவு கொடுக்கப்பட்டன. நதி இணைப்பு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, அது சாத்தியமில்லாதது என்றும், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது அல்ல என்றும் கூறியபோது, திமுக அதை எதிர்த்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அந்தக் கருத்தை எதிர்த்து அப்போது திமுக குரல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நதிகளை இணைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது வாக்குகளைப் பெற மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதி தன் குடும்ப நலனுக்காக மக்கள் நலனை காவு கொடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டிப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply