உளவுத்துறையினரால் உயிருக்கு அச்சுறுத்தல்: சந்திரிகா

இலங்கை அரசின் உளவுத்துறையினர் தன்னை தொடர்ந்து கண்காணித்து வருவதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு கடந்த 5 ஆம் தேதி அவர் அனுப்பிய கடிதம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தக் கடிதத்தில்,”எனது வீடுகள், தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்களை உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனது நண்பர்களிடம் என்னைப் பற்றி விசாரணை நடத்துகின்றனர். இதனால் எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாகக் கருதுகிறேன்.

இந்த நடவடிக்கைகளால் என் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கவலை ஏற்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுவரும் மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்வதாக அந்நாட்டு அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் சந்திரிகாவின் இந்தக் கடிதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply