விமானத்தை தேடியதில் அமெரிக்காவிற்கு 2.5 மில்லியன் டாலர் செலவு
சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலகநாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகம் பெண்டகன் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அமெரிக்கா சார்பில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் விமானங்களும் இந்தியா மற்றும் சீனக்கடற்பகுதிகளில் தேடுவதற்கு கப்பல்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை விமானத்தை தேடும் பணிக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறுப்பட்டிருந்தது. பெண்டகன் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் இப்பணிக்காக 4 மில்லியன் அமெரிக்க டாலர் வரை பட்ஜெட் போட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply