அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது சிறுவன்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியிலுள்ள பெட்போர்ட் சாலைப்பகுதியில் நேற்று மாலை 6.20 மணியளவில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அப்பேருந்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்பேருந்தில் பயணம் செய்த 14 வயது சிறுவனின் துப்பாக்கிக்குண்டு தாக்குதலுக்கு 39 வயது நபர் ஒருவர் பலியானார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் சிறுவன்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலைப்பு பிரச்சனை காரணமாக இத்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இச்சிறுவன் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்தனர். தாக்குதலுக்கு காரணமான சிறுவன் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply