வடகொரியா, தென்கொரியா போட்டி ராணுவ ஒத்திகை
வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடிக்கிறது. இந்நிலையில் 2 நாடுகளும் கடற்பகுதியில் போட்டிப் போட்டு கொண்டு நேற்று போர் ஒத்திகை பயிற்சியில் இறங்கின. அப்போது வடகொரியா பீரங்கியால் சுமார் 500 தடவை சுட்டது அதில் குண்டுகள் தென்கொரியா தீவிற்கு அருகே போய் விழுந்தன. இதனால் தென்கொரியாவும் பதிலடியாக 300 ரவுண்டுகள் குண்டுகளை வீசியது. இருநாட்டு ராணுவத்தினரும் சரமாரியாக சுட்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தென்கொரியா போர் விமானங்கள் இதை தீவிரமாக கண்காணித்தன. இந்த போர் பயிற்சியால் கொரிய தீபகற்ப கடற்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. ஆனாலும் இதில் எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply