இந்திய – பாக். எல்லையில் ரூ.135 கோடி ஹெராயின் பிடிபட்டது
பஞ்சாப் மாநிலம், கான்பூர் அருகேயுள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான அபோஹரில் நேற்றிரவு எல்லைப் பாதுகாப்பு படையினர் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அமாவசை என்பதால், இருளை சாதகமாக்கிக் கொண்டு இந்திய எல்லைப்பகுதிக்குள் சிலர் ஊடுருவ முயன்றதை கவனித்த இந்திய வீரர்ர்கள், அவர்களை சரண் அடைந்து விடுமாறு எச்சரித்தனர். அதனை பொருட்படுத்தாத பாகிஸ்தானியர்கள் இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
எல்லைப் பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தானியர்கள் வந்த வழியே திரும்பி ஓடி இருட்டில் மறைந்தனர். அவர்கள் ஊடுருவ முயன்ற பகுதிக்கு சென்று சோதனையிட்டதில் 27 கிலோ ஹெராயின், 1/2 கிலோ கஞ்சா, 2 கைத்துப்பாக்கிகள், 42 தோட்டாக்கள், 2 செல்போன் மற்றும் ஒரு பாகிஸ்தான் சிம் கார்ட் ஆகியவை கீழே கிடந்தது.
அவற்றை கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப் படையினர், பிடிபட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு 135 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளின் வழியாக கடத்த முயன்ற சுமார் 170 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply