முழு உலகுடனும் கைகோர்த்து செயற்பட உலக இளைஞர் மாநாடு அரிய சந்தர்ப்பம் : டலஸ் அலகப்பெரும 

சர்வதேச இளைஞர் மாநாடு இலங்கையில் நடைபெறுவதால் எமது தேசத்திற்கும் இளைஞர்களுக்கும் முழு உலகுடனும் கைகோர்ப்பதற்கான அரியதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார். இலங்கையில் மே மாதம் 06ம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மாகம்புர ருஹுணுபுர பேரவை மண்டபம் மற்றும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபங்களில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆராய்வதற்காக ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுணுபுர பேரவை மண்டபத்திற்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச இளைஞர் மாநாடு ஆசிய நாடொன்றில் முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளதோடு இதில் இதுவரை 106 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் இளைஞர் அமைச்சர்கள் 27 பேரும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவரும் கலந்து கொள்ளவுள்ளதனால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திகழப்போகின்றது.

எமது நாட்டின் மாத்திரமன்றி முழு உலக நாடுகளினதும் இளைஞர்களினதும் எதிர்பார்புக்களை நிறைவேற்றக் கூடிய கொழும்பு பிரகடனமும் வெளியிடப்படவுள்ளது. இது எமது நாட்டின் பெயரை மேலோங்கச் செய்யும் ஒரு நிகழ்வாகத் திகழும். இவ்வாறான நிகழ்வுகளை இலங்கையில் நடாத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியதற்கான காரணம்.

ஜனாதிபதி அவர்களின் ஆலாசனையும் வழிகாட்டலுமே. நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு சுய சக்தியால் எழுந்திருக்கக் கூடிய சிறந்த வழிகாட்டலை வழங்கக் கூடிய ஒரு சிறந்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காணப்படுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply